/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை திட்டம்
/
திருப்புத்துாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை திட்டம்
திருப்புத்துாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை திட்டம்
திருப்புத்துாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை திட்டம்
ADDED : ஏப் 24, 2025 06:58 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் முக்கிய ரோடுகளில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு, நடைபாதை கடைகளை அகற்ற வருவாய்த்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
திருப்புத்துார் நகரின் முக்கிய ரோடுகளில் பாதசாரிகளுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக ஆக்கிரமிப்பு, நடைபாதை கடைகள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தாசில்தார் மாணிக்கவாசகம், வேளாண் துறை இயக்குனர் தமிழ்ச்செல்வி, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் ரோட்டில் ஆய்வு செய்தனர். அங்கிருந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை ஓரிரு நாளில் அகற்றி கொள்ள அறிவுறுத்தினர். மேலும் விவசாயிகள் உழவர் சந்தைக்குள் காய்கறி கடைகளை நடத்தவும் அறிவுறுத்தினர்.