/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போதிய மழையின்றி கருகும் நெற்பயிர்கள்...பாதிப்பு: வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
/
போதிய மழையின்றி கருகும் நெற்பயிர்கள்...பாதிப்பு: வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
போதிய மழையின்றி கருகும் நெற்பயிர்கள்...பாதிப்பு: வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
போதிய மழையின்றி கருகும் நெற்பயிர்கள்...பாதிப்பு: வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
ADDED : ஜன 03, 2026 06:37 AM

சிவகங்கை:சிவகங்கையில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் 80
ஆயிரம் எக்டேரில் நடவு செய்த விவசாயிகள் நெற்பயிரை காப்பாற்ற முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு, வைகை அணை தண்ணீர், கிணற்று பாசனம், மழையை நம்பி மானாவாரியாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர்.
குறிப்பாக பெரியாறு அணை தண்ணீர் திறப்பின் மூலம் மேலுார் அருகே குறிச்சிப்பட்டி கண்மாயில் இருந்து ஷீல்டு, லெசீஸ், கட்டாணிபட்டி, 48ம் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு இப்பகுதியில் ஒரு போக நெல் சாகுபடி செய்வார்கள்.
மாவட்டத்தில் 80 ஆயிரம் எக்டேரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். மழையை மட்டுமே நம்பி மானாவாரியாக 56 ஆயிரம் எக்டேரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.
அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை துவங்கி, டிசம்பர் வரை பெய்யும். விவசாயிகள் ஒரு போக நெல் சாகுபடி செய்து ஜன.,யில் நெல் அறுவடை செய்வர்.
கைவிட்ட வடகிழக்கு பருவ மழை
2025ல் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்தது. அக்.,ல் ஓரளவு பெய்த மழையை நம்பி நெல் நடவு செய்த விவசாயிகள், அவ்வப்போது பெய்த சிறுசிறு மழையின் மூலம் நெற்பயிரை வளர்த்தனர். டிச.,ல் இயல்பை விட குறைவான மழையே பெய்தது. டிச., - ஜன., மாதத்திற்குள் நெற் பயிர்கள் பால் பிடித்து, நெல் மணியாக முளைத்திருக்க வேண்டும்.
ஆனால் நெல் விளையும் நேரத்தில் தண்ணீரின்றி வயல் காய்ந்து போனது.தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கருக தொடங்கி விட்டன.
ஒரு எக்டேருக்கு 4 முதல் 5 டன் எடுக்க வேண்டிய நிலையில், 2 டன் கூட விளைச்சல் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு இந்த ஆண்டு சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இணை இயக்குனர் (வேளாண்மை) சுந்தரமகாலிங்கம் கூறியதாவது: அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலர்கள் காய்ந்து வரும் நெற்பயிர்கள் குறித்த அறிக்கையை எங்களுக்கு வழங்கி வருகின்றனர். அரசுக்கு கருத்துரு அனுப்ப உள்ளோம். அதே நேரம் வறட்சி மாவட்டமாக சிவகங்கையை, அரசு தான் அறிவிக்க வேண்டும்.
பயிர்காப்பீடு செய்திருந்தால் அதற்கான கணக்கெடுப்பு நடத்தி அரசு சார்பில் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். அதற்கு பின்னரே இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு தொகையை விடுவிக்கும் என்றார்.

