
திருப்புவனம் : திருப்புவனத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நெல் அறுவடை தொடங்கியுள்ளன.
பொங்கலன்று புது பானையில் புது அரிசியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் தாமதமாக பெய்த நிலையில் பம்ப் செட் கிணறு மூலம் நெல் நடவு செய்த விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர்.
மழை காரணமாக வயல் ஈரப்பதமாக இருப்பதால் செயின் வண்டி மூலம் அறுவடை நடைபெறுகிறது. அறுவடை செய்ய செயின்வண்டி, டயர்வண்டி என இரண்டு விதமான வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் செயின் வண்டி வயலில் ஈரப்பதம் இருந்தால் கூட தடையின்றி இறங்கி அறுவடை செய்து விடும்.
ஆனால் செயின் வண்டியில் வைக்கோல் துண்டு துண்டாகி விடுவதால் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது. வைக்கோல் துண்டு துண்டாக விழுவதால், கால்நடை வளர்ப்பவர்கள் விரும்பி வாங்க மாட்டார்கள்.
கார்டர் வகையான வண்டிகளை அறுவடைக்கு பயன்படுத்துகின்றனர்.ஒரு மணி நேரத்திற்கு மூன்று ஆயிரம் வசூலிக்கின்றனர். வைக்கோல் முழுமையாக வெளியே வரும், என்பதால் திருப்புவனம் பகுதியில் அந்த வகையான வண்டிகளையே அறுவடைக்கு பயன்படுத்துகின்றனர்.