/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுவயலில் ரோட்டில் அரிசி ஆலை கழிவுநீர் தேக்கம்
/
புதுவயலில் ரோட்டில் அரிசி ஆலை கழிவுநீர் தேக்கம்
ADDED : ஆக 13, 2025 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: புதுவயலில் அரிசி ஆலை கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இங்கு ஏராளமான அரிசி ஆலைகள் செயல்படுகின்றன. இங்கிருந்து அரிசி மூடைகளாக வெளிநாடுகள், பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
அரிசி ஆலை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல், கழிவுநீர் கால்வாயில் விடுகின்றனர். இதனால், புதுவயல் -- அறந்தாங்கி ரோட்டில் ஆலை கழிவுநீர் தேங்கி, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.