/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் அடிப்படை வசதி கோரி சாலை மறியல்
/
மானாமதுரையில் அடிப்படை வசதி கோரி சாலை மறியல்
ADDED : ஜூன் 11, 2025 07:27 AM

மானாமதுரை : மானாமதுரையில், தாயமங்கலம் ரோட்டில் உள்ள காந்திஜி நகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தரக்கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இங்கு, 200க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதுமான கழிவு நீர் கால்வாய் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் சிறிய மழை பெய்தாலே மழை நீரோடு கழிவு நீரும் தேங்கி நிற்பது மட்டுமின்றி, வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்து துர்நாற்றம் வீசும். பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. இதனால், நேற்று மாலை மானாமதுரையில் பெய்த மழைக்கு காந்திஜி நகர் பகுதியில் கழிவுநீருடன் மழை நீர் சேகரமானது.
இதில் அதிருப்தியான அப்பகுதி மக்கள் கவுன்சிலர் முனியசாமி(எ)நமகோடி, மக்கள் நீதி மயம் நிர்வாகி மூர்த்தி ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களிடம் போலீசார், வருவாய்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் ஒரு மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டன.