ADDED : ஜன 10, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: குட்டித்தின்னி கிராமத்தில்   ஏராளமான பெண்கள் வசித்து வருகின்றனர்.இக்கிராமத்தில் விண்ணப்பித்த 60க்கும் மேற்பட்டோருக்கு உரிமைத்தொகை வரவில்லை.
நேற்று 60க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்கள் உரிமைத்தொகை வழங்க கோரி மானாமதுரை - சிவகங்கை ரோட்டில் சுந்தர நடப்பு விலக்கு அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மானாமதுரை சிப்காட் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் உரிமைத் தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

