ADDED : மே 22, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஒன்றியம் மாவிடுதிக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்தது கோடிக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
சில நாட்களாக குடிநீர் வரவில்லை. அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லை. நேற்று முன்தினம் ஊரில் கோயில் திருவிழா நடந்தது. திருவிழாவிற்கு குடிநீர் தடையின்றி வழங்க கிராமத்தினர் கோரிக்கை வைத்தனர்.
திருவிழா அன்றும் தண்ணீர் வராததால் கிராமத்தினர் நேற்று காலை ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.