/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாலத்தை சீரமைக்காமல் அமைக்கப்பட்ட ரோடு
/
பாலத்தை சீரமைக்காமல் அமைக்கப்பட்ட ரோடு
ADDED : டிச 13, 2025 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பழுதடைந்த பாலத்தை சீரமைக்காமல் அதன் மேல் சாலை போடப்பட்டதால் தொடர் விபத்து நடக்கிறது.
இவ்வொன்றியத்தில் சிங்கம்புணரியில் இருந்து செருதப்பட்டி செல்லும் சாலை புதிதாக போடப்பட்டது. இதில் பருவபட்டி விலக்கு அருகே குறுக்கே செல்லும் பாசன கால்வாயை சீரமைக்காமல் அதன் மேல் அப்படியே ரோடு போடப்பட்டது. இதனால் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து ரோடு சரிந்து வருகிறது.
இரவு நேரங்களில் இப்பள்ளத்தில் வாகனங்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே பலர் விழுந்து காயமடைந்துள்ள நிலையில், உடனடியாக பாலம் அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும்.

