/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இரணியூரில் ரோட்டை புதுப்பிக்க வேண்டும்
/
இரணியூரில் ரோட்டை புதுப்பிக்க வேண்டும்
ADDED : செப் 29, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே இரணியூரில் மண் ரோடாக மாற்றிய தார் ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இங்கு ஆட்கொண்டநாதர், சிவபுரதேவி கோயில் உள்ளது. இதற்கு அருகே பிரதான ரோடு உள்ளது.
இந்த ரோடு 10 ஆண்டிற்கு முன் போடப்பட்டு, தற்போது சேதமடைந்து மண் ரோடாக மாறி விட்டன.
இதனால் இந்த ரோட்டை பயன்படுத்தும் மார்க்கண்டேயன்பட்டி, பொட்டப்பட்டி, செண்பகம்பேட்டை, இளையாத்தங்குடி கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த ரோட்டைபுதுப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.