ADDED : ஜன 19, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஓட்டுனர்களுக்கான கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. வட்டார போக்குரத்து அலுவலர் மூக்கன் தலைமை வகித்தார்.
மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், சுங்கச்சாவடி பொறுப்பாளர் முத்துகுமார் பங்கேற்றனர். நான்கு வழிச்சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கண்பரிசோதனை செய்யப்பட்டது.

