/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைக்கிராமம் ரோடு அகலப்படுத்தும் பணி
/
சாலைக்கிராமம் ரோடு அகலப்படுத்தும் பணி
ADDED : ஆக 14, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி,; இளையான்குடியில் இருந்து சாலைக்கிராமம் செல்லும் 15 கி.மீ., துாரமுள்ள ரோடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகலப்படுத்தும் பணி நடந்தது.
இளையான்குடி இந்திரா நகர் பகுதியிலிருந்து கபேரியேல் பட்டினம் வரை ரோட்டின் ஓரங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றதால் அப்பகுதியில் ரோடு விரிவாக்கம் நடைபெறாமல் இருந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி முடிவு பெற்றதை தொடர்ந்து தொடர்ந்து இப்பகுதியில் ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.