/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சந்திரன்பட்டியில் ரோடு பணி தாமதம்
/
சந்திரன்பட்டியில் ரோடு பணி தாமதம்
ADDED : செப் 30, 2025 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: திருப்புத்துார் அருகே பொட்டப்பட்டியில் பல ஆண்டாக கிடப்பில் உள்ள ரோடு பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சேவினிபட்டி ஊராட்சி சந்திரன்பட்டியில் இருந்து, பொட்டப்பட்டிக்கு 2023 ல் புதிய தார்ரோடு பணி துவங்கியது. வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சத்தில் 4 பாலங்களுடன் ரோடு போட திட்டமிட்டனர். இந்த ரோட்டில் ஜல்லி கற்களை மட்டுமே கொட்டிவிட்டு பணியை நிறைவு செய்ய முடியாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் சந்திரன்பட்டி, பொட்டப்பட்டி, மார்க்கண்டேயன்பட்டி கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த ரோட்டை முழுமையாக புதுப்பித்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.