ADDED : ஆக 18, 2026 04:43 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஆக.19-சாலைப்பணியாளருக்கு தர ஊதியம் வழங்க கோரி சிவகங்கை நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும்.
கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தர ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர் சங்க கோட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். மாநில செயற்குழு ஆசைதம்பி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கோட்ட செயலாளர் ராஜா விளக்க உரை ஆற்றினார். மாநில பொருளாளர் தமிழ் நிறைவுரை ஆற்றினார். கோட்ட பொருளாளர் சதுரகிரி நன்றி கூறினார். ///
