ADDED : ஆக 18, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஆக.19-சிவகங்கையில் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், உதவி கமிஷனர் (ஆயம்) சிவபாலன் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவ கல்லுாரி உதவி நிலைய மருத்துவ அலுவலர் தென்றல்,பேராசிரியை பூங்கொடி பங்கேற்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்தனர். ///
