ADDED : அக் 23, 2026 08:47 PM
சிவகங்கை: நெடுஞ்சாலைத்துறையில் 10 ஆயிரம் காலிபணியிடம் நிரப்ப வலியுறுத்தி சிவகங்கை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு கோட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். மாநில செயற்குழு ஆசைதம்பி வரவேற்றார். கோட்ட துணை தலைவர்கள் முனியசாமி, சுதந்திரமணி, பாலசுப்பிரமணியன், வீரய்யா முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்க உரை ஆற்றினார். கோட்ட செயலாளர் ராஜா கோரிக்கையைவிளக்கி பேசினார். மாநில பொருளாளர் தமிழ் நிறைவுரை ஆற்றினார். கோட்ட பொருளாளர் சதுரகிரி நன்றி கூறினார். சாலை பணியாளர் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்று, மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். 10 ஆயிரம் காலிப்பணியிடம் நிரப்பு, உயிரிழந்த சாலை பணியாளர் வாரிசுகளுக்க பணி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ///
