ADDED : அக் 11, 2025 04:10 AM

சிவகங்கை: மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை ரத்து செய்வது உட்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜா கோரிக்கையை விளக்கி பேசினார்.
இணை செயலாளர்கள் சின்னப்பன், கணேசன், பாண்டி, துணை தலைவர்கள் சுதந்திரமணி, வீரையா, பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதா கிருஷ்ணன் போராட் டத்தை துவக்கி வைத்தார்.
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டி, பிற்பட்டோர் நலத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோபால், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், சாலை ஆய்வாளர் சங்க செயலாளர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் கார்த்திக், தணிக்கையாளர் மீனா, கால்நடை ஆய்வாளர் சங்க தணிக்கையாளர் ராஜாமுகம்மது பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் சதுரகிரி நன்றி கூறினார்.