/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் சிதறி கிடக்கும் ரோட்டோர தடுப்புகள்
/
காரைக்குடியில் சிதறி கிடக்கும் ரோட்டோர தடுப்புகள்
ADDED : மே 18, 2025 11:25 PM

காரைக்குடி: திருச்சி -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடி பகுதியில் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள போலீஸ் தடுப்புகள் சிதறிகிடப்பதால், விபத்து அச்சம் நிலவுகிறது.
இத்தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடி அருகே மானகிரி, ஓ.சிறுவயல், பாதரக்குடி, சூரக்குடியில் சந்திப்பு ரோடுகள் உள்ளன.
இப்பகுதி நான்கு சாலைகள் சந்திப்பில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நேரிடுகின்றன.
இந்த விபத்துக்களை தடுக்கவும், அதிகவேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் மாநில சாலைகளில் தடுப்புகள் அமைத்துள்ளனர்.
அதே போன்று சந்திப்பு ரோடுகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகளும் சரியாக எரிவதில்லை.
இதனால் இரவில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பெரும் விபத்து நேரிடும் முன் ரோட்டில் சிதறிகிடக்கும் தடுப்புகளை அகற்ற வேண்டும்.