/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொள்ளையர்கள் கைது எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
கொள்ளையர்கள் கைது எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : பிப் 01, 2024 04:18 AM
சிவகங்கை : கொள்ளையர்களை விரைந்து கைது செய்யவும் காளையார்கோவில் மக்களுக்கு திருட்டு அச்சத்தை போக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது:
காளையார்கோவில் அருகே கல்லுவழியில் ஜன.26ம் தேதி அதிகாலை வீட்டில் துாங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபரை கம்பியால் கொடூரமாக தாக்கி வீட்டில்இருந்த நகைகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காளையார்கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கொள்ளை சம்பவம் நடந்து வரு கிறது. இவற்றை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மறவமங்கலம் பகுதியில் தனியாக போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்றார்.