/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் அருகே உண்டியல் உடைப்பு டூவீலரை மறந்து சென்ற கொள்ளையர்கள்
/
திருப்புவனம் அருகே உண்டியல் உடைப்பு டூவீலரை மறந்து சென்ற கொள்ளையர்கள்
திருப்புவனம் அருகே உண்டியல் உடைப்பு டூவீலரை மறந்து சென்ற கொள்ளையர்கள்
திருப்புவனம் அருகே உண்டியல் உடைப்பு டூவீலரை மறந்து சென்ற கொள்ளையர்கள்
ADDED : ஆக 20, 2025 11:07 PM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் ஊர்க்காவலன் சுவாமி கோயில் உண்டியலை கொள்ளையடித்த திருடர்கள் பொதுமக்கள் வந்ததால் டூவீலரை விட்டு தப்பி சென்றனர்.
மதுரை -- பரமக்குடி 4 வழிச்சாலையையொட்டியுள்ள வில்லியரேந்தலில் ஊர்க்காவலன் சுவாமி கோயில் உள்ளது. கோயிலில் சில மாதங்களுக்கு முன் கிராமத்திருவிழா மற்றும் ஆடித்திருவிழா நடந்தது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த மூன்று உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் நள்ளிரவில் புதிய டூவீலரில் வந்த திருடர்கள் இருவர் சுவர் ஏறி குதித்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர். பி ன் கோயில் அலுவலக அறையை உடைக்க முயன்ற போது ஆட்கள் வரும் சப்தம் கேட்க சுவர் ஏறி குதித்து தப்பி சென்றனர்.
பொது மக்கள் அளித்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் டூவீலரை கைப்பற்றி திருடர்களை தேடினர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. புதிய டூவீலரையும் திருடி கொண்டு வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கோயில் உண்டியலை உடைக்க முயன்ற திருடர்கள் கைலியை வைத்து முக்காடிட்டு உடைத்தது 'சிசிடிவி' காட்சிகளில் பதிவாகி இருந்தது.
கிராமத்தினர் கூறியதாவது: உண்டியலில் ரூ.ஒரு லட்சம் வரை இருந்திருக்க வாய்ப்புள்ளது. தங்க நகைகள் குறித்து தெரியவில்லை. ஏற்கனவே இரு முறை உண்டியல் உடைக்கப்பட்டு ப ணம் கொள்ளையடிக்கப்பட்டதால் ஒரு சில்வர் உண்டியலை இரும்பு லாக்கர் உண்டியலாக மாற்றி விட்டோம்.
சில்வர் உண்டியலை உடைத்து தான் திருடியுள்ளனர். ஏற்கனவே நடந்த இரு திருட்டுகளிலும் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றனர்.