ADDED : செப் 25, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாணிக்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் பரமசிவம் 42. இவர் காந்தி வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு ஒருவர் நகை வாங்க வந்துள்ளார்.
அவர் தங்க செயினை காண்பிக்க கூறியுள்ளார். பரமசிவம் கடையில் உள்ள செயின்களை காண்பித்தார். பரமசிவம் கவனத்தை திசை திருப்பி ஒன்றரை பவுன் செயினை அந்த நபர் எடுத்துக் கொண்டார். பின்னர் செயின் எதுவும் வாங்காமல் சென்றார். சந்தேகமடைந்த கடை உரிமையாளர் பரமசிவம் செயினை சரிபார்த்ததில் ஒரு செயின் குறைந்துள்ளது.
அதற்குள் அந்த நபர் மாயமானார் .பரமசிவம் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலிசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் செயின் திருடிய நபரை தேடி வருகின்றனர்.