/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் கொள்ளை
/
கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் கொள்ளை
ADDED : அக் 24, 2024 05:17 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வீடு புகுந்து, துாங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையர் கொள்ளையடித்து சென்றனர்.
சிங்கம்புணரி, கம்பலிங்கம் தெருவை சேர்ந்தவர் நிர்மலா தேவி 72. இவரது மகள் திருச்செல்வி. இருவரும் அக். 22ல் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து கதவைத் திறந்து கத்தியுடன் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த ஒரு லட்ச ரூபாயை திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து நிர்மலா தேவியின் பேத்தி காயத்ரி சிங்கம்புணரி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

