ADDED : செப் 11, 2025 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் வாரச்சந்தையில் கூரை அமைக்க பொதுமக்கள் கோரி யுள்ளனர்.
திருப்புத்துார் வாரச்சந்தையில் தற்போது கூரையுடன் கூடிய கடைகள் வியாபாரிகளுக்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. கடைகள் 6 வரிசையாக கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கு இடையே மக்கள் நிற்கும் இடத்தில் நிழற்கூரை இல்லை. இதனால் மழை,வெயில் காலங்களில் சந்தைக்கு வரும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
முன்பு இப்பகுதியில் பரவலாக மரங்கள் இருந்து நிழலைக் கொடுத்தன. இதனால் காலை முதல் மாலை வரை சந்தை நடந்தது. தற்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு பயந்து மக்கள் பகலில் வருவதில்லை. மாலையில் தான் சந்தைக்கு வருகின்றனர். இரவு 9:00மணி வரை வியாபாரம் நடக்கிறது. இதைத் தவிர்க்க மக்களுக்கு வசதியாக நிழற்கூரை அமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.