/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
லாரியில் ரூ 1.28 லட்சம் மதுபாட்டில் திருட்டு
/
லாரியில் ரூ 1.28 லட்சம் மதுபாட்டில் திருட்டு
ADDED : மார் 24, 2025 05:44 AM
திருப்புத்தூர்: புதுக்கோட்டையிலிருந்து திருப்புத்தூர் வரும் வழியில் லாரியில் ஏற்றி வந்த ரூ 1.28 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடு போனது.
புதுக்கோட்டை மாவட்டம் கள்ளங்கோட்டையில் உள்ள மதுபான உற்பத்தி ஆலையிலிருந்து மார்ச் 19 ம் தேதி 1,100 பெட்டிகளில் 180 மி.லி., (குவார்ட்டர்) வீதம் 52,800 பாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு சிவகங்கை மாவட்டத்திற்கு டிரைவர் செல்வராஜ் ஓட்டி வந்தார். வரும் வழியில் புதுக்கோட்டை லேனா விலக்கு அருகே டீக்கடையில் நிறுத்தி டீ குடித்து விட்டு புறப்பட்டார். கீழச்சிவல்பட்டி அருகே டோல்கேட்டில் லாரியை நிறுத்தி டிரைவர் இறங்கி பார்த்துள்ளார். அப்போது லாரியில் மூடப்பட்ட பெட்டிகள் திறந்தநிலையில் கிடந்தன. அதில் இருந்து 19 பெட்டிகளில் ரூ.1.28 லட்சம் மதிப்பிலான 912 பாட்டில்களை திருடி சென்றது தெரிந்தது. கீழச்சிவல்பட்டி எஸ்.ஐ., சிவக்குமார் விசாரித்து வருகிறார்.