/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி
/
வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 04, 2025 01:01 AM
சிவகங்கை: சிவகங்கையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் மீது நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை புத்தர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் 46. இவர் அரண்மனை வாசல் பகுதியில் உள்ள கடையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் வேலை பார்க்கும் கடைக்கு இடையமேலுார் சரவணக்குமார் 45 அடிக்கடி வந்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பாஸ்கர் மனைவி எம்.ஏ., படித்திருப்பதாக சரவணக்குமாரிடம் கூறியுள்ளார்.
சரவணக்குமார் திருப்புத்துார் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி இருப்பதாகவும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப போவதாகவும் அந்த பணியை பாஸ்கர் மனைவிக்கு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். அதற்காக ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை 2022 ஆக.14ல் பெற்றுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட சரவணக்குமார் அரசு பணி வாங்கி தராமல் ஏமாற்றினார். பாஸ்கர் நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரித்து வருகிறார்.