/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தகரத்தால் ஓய்வறை கூரை அமைப்பு இளைப்பாற முடியாமல் தவிப்பு ரூ.20 லட்சம் வீணானது

ADDED : ஜூன் 04, 2025 12:54 AM

காரைக்குடி: காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் மக்களுக்கான ஓய்வறை தகர ஷீட்டால் அமைக்கப்பட்டுள்ளதால் கொளுத்தும் வெயிலில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காரைக்குடியில் சூரக்குடி சாலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு காரைக்குடி மட்டுமின்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர்.
இம்மருத்துவமனையில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு புதிய கட்டடம் கட்டப்பட்டது. பிரசவத்திற்காக வருபவர்களின் உறவினர்கள் தங்க இட வசதி இல்லை. 2023 ம் ஆண்டு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தில் ஓய்வு அறை கட்டப்பட்டது. இந்த ஓய்வு அறை மேற்பகுதி தகரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. வெயில் காரணமாக, ஓய்வறையில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் தங்க முடியாத சூழல் நிலவுகிறது. வெப்பம் காரணமாக ஓய்வறையில் குழந்தைகளை துாங்க வைக்க முடியாமல் அருகில் உள்ள வாகன பார்க்கிங் பகுதியில் தொட்டில் கட்டி துாங்க வைக்கின்றனர்.