/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீட்டில் ரூ.25.25 லட்சம் நகைகள் வெள்ளி பொருட்கள் கொள்ளை
/
வீட்டில் ரூ.25.25 லட்சம் நகைகள் வெள்ளி பொருட்கள் கொள்ளை
வீட்டில் ரூ.25.25 லட்சம் நகைகள் வெள்ளி பொருட்கள் கொள்ளை
வீட்டில் ரூ.25.25 லட்சம் நகைகள் வெள்ளி பொருட்கள் கொள்ளை
ADDED : நவ 02, 2024 02:30 AM
திருக்கோஷ்டியூர்:சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் வீட்டின் பின் கதவை உடைத்து பீரோவில் ரூ.25.25 லட்சம் மதிப்புள்ள 49.5 பவுன் வைர, தங்க நகைகள், வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
காரைக்குடியை சேர்ந்த கந்தசாமி மகன் சிதம்பரம். இவரது பூர்வீக வீடு கண்டரமாணிக்கம் திருப்புத்துார் ரோட்டில் உள்ளது. அக்., 30ல் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாக எதிரே பெட்டிக்கடை வைத்துள்ள தங்கவேல் சிதம்பரத்திடம் தெரிவித்தார். அவர் வந்து பார்த்த போது மர்மநபர்கள் வீட்டின் இரும்பு கேட்டை உடைத்து மர பீரோவில் 52 கிலோ வெள்ளி பொருட்கள், 49.5 பவுன் வைர, தங்க நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. மதிப்பு ரூ.25.25 லட்சம். திருப்புத்துார் டி.எஸ்.பி., ஜெயக்குமார், திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் செல்வராகவன், எஸ்.ஐ.,க்கள் சக்திவேல், சஜூ விசாரிக்கின்றனர்.