/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருச்சி - மானாமதுரை இடையே 150 கி.மீ., க்கு இரட்டை ரயில் பாதை
/
திருச்சி - மானாமதுரை இடையே 150 கி.மீ., க்கு இரட்டை ரயில் பாதை
திருச்சி - மானாமதுரை இடையே 150 கி.மீ., க்கு இரட்டை ரயில் பாதை
திருச்சி - மானாமதுரை இடையே 150 கி.மீ., க்கு இரட்டை ரயில் பாதை
UPDATED : ஜூன் 05, 2025 04:23 AM
ADDED : ஜூன் 05, 2025 02:14 AM

சிவகங்கை:திருச்சி - புதுக்கோட்டை- சிவகங்கை வழியாக மானாமதுரை வரை இரட்டை ரயில் பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்த பின், ராமேஸ்வரத்திற்கு அதிக ரயில்கள் இயக்கப்படுகின்றன. வடமாநிலங்களில் உள்ள ஆன்மிக சுற்றுலா தலங்களை இணைக்கும் விதமாக கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக இரண்டாவது ரயில் பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்க, தெற்கு ரயில்வே நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது.
* ரூ.2.82 கோடியில் திட்ட அறிக்கை:
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி, புதுக்கோட்டை சிவகங்கை வழியாக மானாமதுரை வரையிலான 150 கி.மீ., ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்றுவதற்கு எவ்வளவு நிலம் எடுக்க வேண்டும். எந்தந்த இடங்களில் சிறிய, பெரிய மற்றும் மேம்பாலம் தேவைப்படும் என்பது போன்று விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2.82 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம், என்றார்.