/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் தங்க நகை, வெள்ளி திருட்டு
/
பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் தங்க நகை, வெள்ளி திருட்டு
பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் தங்க நகை, வெள்ளி திருட்டு
பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் தங்க நகை, வெள்ளி திருட்டு
ADDED : செப் 25, 2025 05:00 AM

சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 54. இவர் குடும்பத்துடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவ்வப்போது தனது சொந்த ஊரில் நடக்கும் விசேஷங்களுக்கு வந்து செல்வார். கடந்த 4ம் தேதி உரத்துப்பட்டியில் உள்ள உறவினர் விசேஷத்திற்காக குடும்பத்துடன் வந்து 5ம் தேதி மாலை 5:00 மணிக்கு சென்னை சென்றார்.
22ம் தேதி காலை 11:00 மணிக்கு உரத்துப்பட்டி மாணிக்கம் என்பவர் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக ராஜேந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். ராஜேந்திரன் சென்னையில் இருந்து வந்து வீட்டை பார்த்த போது வீட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் தங்க செயின், அரை பவுன் மோதிரம், அரை பவுன் தோடு 1 ஜோடி, வெள்ளி விளக்கு 2, வெள்ளி செம்பு 1 உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரியவந்தது. ராஜேந்திரன் உலகம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.