/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மகளிர் குழுவினருக்கு ரூ.76.14 கோடி கடன்
/
மகளிர் குழுவினருக்கு ரூ.76.14 கோடி கடன்
ADDED : செப் 17, 2025 02:34 AM
சிவகங்கை : சிவகங்கையில் 883 மகளிர் குழுக்களுக்கு ரூ.76.14 கோடிக்கான வங்கி கடன் ஆணைகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார்.
மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா வரவேற்றார். மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தனர். மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், நகராட்சி துணை தலைவர் கார்கண்ணன் பங்கேற்றனர்.
விழாவில் 883 மகளிர் குழுவை சேர்ந்த 9,170 உறுப்பினர்களுக்கு ரூ.76.14 கோடிக்கான வங்கி கடன் ஆணைகளையும், 3,810 மகளிர் குழுவினருக்கு அடையாள அட்டையை அமைச்சர் வழங்கினார். உதவி திட்ட அலுவலர் சின்னதுரை நன்றி கூறினார்.