/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பங்குச்சந்தை முதலீடில் ரூ.82 லட்சம் மோசடி
/
பங்குச்சந்தை முதலீடில் ரூ.82 லட்சம் மோசடி
ADDED : ஏப் 05, 2025 03:10 AM
சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில் பங்கு சந்தையில் முதலீடு செய்து, அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.82 லட்சம் மோசடி செய்ததாக சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்புத்துாரை சேர்ந்த ஓ.என்.ஜி.சி., ஓய்வு அலுவலர் குமாரசாமி. இவரது அலைபேசிக்கு ஜன.,26 ம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் ஒருவர் பேசியுள்ளார். அவர் தன்னை பங்குச்சந்தை முதலீட்டாளர் ஆலோசகர் எனக்கூறி அறிமுகம் செய்துள்ளார்.
குமாரசாமியிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அவர் கூறிய 1-0 வங்கி கணக்கில் 12 முறை பரிவர்த்தனைகளின் மூலம் ரூ.82.55 லட்சம் வரை வழங்கினார்.
பணத்தை பெற்று சில மாதங்களாக லாப தொகை தராமல், மீண்டும் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த குமாரசாமி, சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., முருகானந்தம் வழக்கு பதிந்துள்ளார்.

