ADDED : அக் 07, 2024 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: விஜயதசமியை முன்னிட்டு திருப்புத்துாரில் ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு ஊர்வலம் துவங்கியது. சீருடையுடன் 500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, சீரணி அரங்கில் நிறைவு பெற்றது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. ஏராளமான ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பங்கேற்றனர்.