/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் ருத்ரயாகம் நிறைவு
/
திருப்புத்துாரில் ருத்ரயாகம் நிறைவு
ADDED : டிச 13, 2025 05:30 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் கோவை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதின மடம் சார்பில் உலக நன்மை வேண்டி நடத்திய ருத்ரமகாயாகம் நிறைவடைந்தது.
கோவை மாவட்டம் கூனம்பட்டி ஆதினம் மகர ஆதிரை மகோத்ஸவம் உலக நன்மை வேண்டி சிவத்தலங்களில் ருத்ரமகாயாகம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ருத்ரமகாயாகம் மற்றும் ருத்ர ஜபம் துவங்கி இருகால யாகம் நடந்தது.
நேற்று காலை சுப்பிரமணியர் சன்னதியில் சுவாமி,அம்பாள் சார்பில் இரு கலசங்கள் பிரதிஷ்டை செய்து யாகம் துவங்கியது. காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
பின்னர் கலசங்கள் யாகசாலையிலிருந்து புறப்பாடாகி சுவாமி,அம்பாள் சன்னதி சென்றது. தொடர்ந்து மூலவர் திருத்தளிநாதர், சிவகாமி அம்பாளுக்கு கலசாபிேஷகம் நடந்தது. பின்னர் அலங்காரத்தில் சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.

