/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே சுரங்கப்பாதையில் ஊற்று வற்றாத தண்ணீரால் அவதி
/
ரயில்வே சுரங்கப்பாதையில் ஊற்று வற்றாத தண்ணீரால் அவதி
ரயில்வே சுரங்கப்பாதையில் ஊற்று வற்றாத தண்ணீரால் அவதி
ரயில்வே சுரங்கப்பாதையில் ஊற்று வற்றாத தண்ணீரால் அவதி
ADDED : டிச 13, 2025 05:30 AM

காரைக்குடி: காரைக்குடி மாத்துார் செல்லும், ரயில்வே சுரங்கப்பாதையில், ஊற்று ஊறி தண்ணீர் குறையாததால் வாகன ஓட்டிகள் சுற்றி செல்ல வேண்டியுள்ளதோடு, பலர் ஆபத்தை உணராமல் அதில் பயணம் மேற்கொள்கின்றனர்.
காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரியை ஒட்டி, மாத்துார் கண்டனுார் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. புதுவயல், கண்டனுார் பகுதியில் இருந்து வருபவர்கள் பாரி நகர், ஸ்ரீராம் நகர், கோட்டையூர் சுற்றி அலைவதை தவிர்க்கும் பொருட்டும்,
ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட்டில், நீண்ட நேரம் காத்துக் கிடப்பதை தவிர்க்கும் பொருட்டும் இந்த ரயில்வே சுரங்க பாதையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடக்கிறது.
தற்போது மழை பெய்து பல நாட்களைக் கடந்தும் தண்ணீர் வற்றவில்லை. மாறாக சுரங்கப்பாதையில் கீழிருந்து ஊற்று மூலம், தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இதனால் சுரங்க பாதையில் எப்போதும் தண்ணீர் காணப்படுகிறது. நீரின் அளவு தெரியாமல், பாதையை கடக்க முயல்வோர் தண்ணீரில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது.

