/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊரக வளர்ச்சித்துறை சங்க ஆண்டு விழா
/
ஊரக வளர்ச்சித்துறை சங்க ஆண்டு விழா
ADDED : செப் 13, 2025 04:01 AM
சிவகங்கை: சிவகங்கையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க ஆண்டு அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பெரியசாமி, துணை தலைவர் வேலுச்சாமி, தனபால், பயாஸ் அகமது பங்கேற்றனர்.
கலெக்டர் அலுவலகம், அரசு ஊழியர் சங்க அலு வலகத்தில் சங்க கொடியேற்றினர். வட்டார அளவில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் சங்க கொடியேற்றி வைத்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி, அனைத்து அங்கன்வாடி, சத்துணவு ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோபால், இணை செயலாளர் சிவப்பிரகாசம் பங்கேற்றனர்.