ADDED : மார் 01, 2024 12:14 AM
சிவகங்கை : விருதுநகர் கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர் கலெக்டர், பி.டி.ஓ., ராஜசேகரன், உதவி பொறியாளர் பிரபா ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு மற்றும் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கையில் நடந்த ஆர்பாட்டத்திற்கு கிளை துணை தலைவர் இளையராஜா, காளையார்கோவிலில் வட்டார தலைவர் ஷகிலா, மானாமதுரையில் வட்டார செயலாளர் ராஜேஸ்வரன், இளையான்குடியில் வட்டார செயலாளர் பழனி, சிவகங்கையில் வட்டார தலைவர் பாண்டிச்செல்வி, திருப்புவனத்தில் வட்டார தலைவர் காசிவிஸ்வநாதன், சாக்கோட்டையில் வட்டார தலைவர் ராமநாதன், திருப்புத்துாரில் வட்டார தலைவர் சிவா, சிங்கம்புணரியில் வட்டார தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பெரியசாமி, துணை தலைவர் லுாயிஸ் ஜோசப் தணிக்கையாளர் சேக் அப்துல்லா பங்கேற்றனர்.

