UPDATED : நவ 19, 2026 07:10 PM
ADDED : நவ 19, 2026 07:10 PM

சிவகங்கை: வெற்றி வீடு திட்டத்தில் நெருக்கடியை கைவிட்டு, போதிய பணியிடம் ஒதுக்க வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு வகித்தார். மாவட்ட துணை தலைவர் தனபால் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட துணை தலைவர் வேலுச்சாமி, தனபால், கார்த்திக், பயாஸ் அகமது, பழனிச்சாமி, மாவட்ட இணை செயலாளர்கள் சேக் அப்துல்லா, சகிலா, சிவா, மீனா, மாவட்ட தணிக்கையாளர் பவளமுத்து முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி துவக்க உரை ஆற்றினார். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் லதா, பிற்பட்டோர் நலத்துறை மாவட்ட தலைவர் கோபால் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார். ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்க வேண்டும். வேலை உறுதி திட்ட கம்ப்யூட்டர் உதவியாளர், திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். .
