/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கருத்தரங்கு
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கருத்தரங்கு
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கருத்தரங்கு
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கருத்தரங்கு
ADDED : மே 11, 2025 11:13 PM
சிவகங்கை; காரைக்குடியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகளுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
சங்க மாவட்ட தலைவர் லுாயிஸ் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சிவா, தேவகோட்டை தலைவர் ரீகன், சாக்கோட்டை தலைவர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாநில தலைவர் காந்திமதிநாதன் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் பொது செயலாளர் செல்வம் சிறப்புரை ஆற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில பொது செயலாளர் பாரி தலைமை பண்புகள் குறித்து கருத்தரங்கில் பேசினார். மாநில பொருளாளர் விஜய்பாஸ்கர், மாவட்ட நிர்வாகிகள் வேலுச்சாமி, தனபால், கார்த்திக், பயாஸ் அகமது பழனிச்சாமி, இணை செயலாளர் மலர்விழி, சேக் அப்துல்லா, தணிக்கையாளர் குமரேசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டி, செயலாளர் லதா, சத்துணவு ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மாரி பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார்.
கருத்தரங்கில் பணி மேற்பார்வையாளர்களுக்கு சங்கத்தின் கோரிக்கைபடி மதிப்பீட்டு உச்சவரம்பு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. போராட்ட காலங்களை வரன்முறை செய்துள்ளனர்.
இருப்பினும் பல கோரிக்கைகள் நிலுவையில் இருந்து வருகிறது. நிலுவை கோரிக்கைக்கு அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.