/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
/
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
ADDED : டிச 31, 2025 05:34 AM

சிவகங்கை: மத்திய அரசு தேசிய வேலை உறுதி திட்ட பெயரினை மாற்றம் செய்ததை கண்டித்து சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலக ஆர்ச் முன் நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை தலைவர் வேலுச்சாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாநில துணை தலைவர் ஜான்செல்வராஜ் துவக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் மாரி, பொதுப்பணித்துறை கணக்கு பணியாளர் சங்க துணை தலைவர் கலைச்செல்வி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் மரிய அருள் செபஸ்டியான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மூர்த்தி, மதிப்புறு தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

