/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
3 ஆண்டுக்கு ஒரு முறை மாறுதல் ஊரக வளர்ச்சி பணியாளர் சங்கம் தீர்மானம்
/
3 ஆண்டுக்கு ஒரு முறை மாறுதல் ஊரக வளர்ச்சி பணியாளர் சங்கம் தீர்மானம்
3 ஆண்டுக்கு ஒரு முறை மாறுதல் ஊரக வளர்ச்சி பணியாளர் சங்கம் தீர்மானம்
3 ஆண்டுக்கு ஒரு முறை மாறுதல் ஊரக வளர்ச்சி பணியாளர் சங்கம் தீர்மானம்
ADDED : ஆக 13, 2025 02:06 AM
திருப்புத்துார்: திருப்புத்தூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் வட்டக் கிளை கூட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணியாற்றுபவர்களை மாறுதல் செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.
திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் மாநில பிரச்சார செயலாளர் சதாசிவம் கொடியேற்றினார்.
ஊரக வளர்ச்சித்துறை மேல்நிலை அலுவலர் சங்கம் ரவி, முன்னாள் மாநில துணை தலைவர் முத்துராமன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் சங்கரன், மாவட்ட தலைவர் அப்துல் ஜாபர், செயலாளர் சுதாகர், பொருளாளர் சதீஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானம்: மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை பணி மாறுதல் செய்ய வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் தலைமை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலான பணியாளருக்கு பணியிடம் ஒதுக்காமல் தரப்பட்டுள்ள மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில் வட்ட தலைவராக சந்திரசேகர், செயலாளர் ஜேம்ஸ், பொருளாளர் சத்யா, மாநில செயற்குழு கலைவாணி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணை தலைவர் அய்யனார் நன்றி கூறினார்.