/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 30, 2025 06:22 AM
சிவகங்கை; ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு பென்ஷனை நீட்டிக்க வலியுறுத்தி சிவகங்கை தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட தலைவர் அம்பிகாவதி, எழுத்தர் சங்க பிரிவு கோட்ட தலைவர் மதிவாணன் கூட்டு தலைமை வகித்தனர். கிராம அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் செல்வன், அகில இந்திய தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் நடராஜன் உட்பட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர சம்பளம் வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை காலதா மதமின்றி நடைமுறைபடுத்த வேண்டும். இன்சூரன்ஸ் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஊதிய விடுப்பு நாட்கள் 180க்கும் பணமாக்க அனுமதிக்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.