/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா மார்ச் 29 ல் காப்பு கட்டு

ADDED : மார் 17, 2025 06:33 AM
மானாமதுரை, மார்ச் 17-
மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.
மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டிற்கான விழா மார்ச் 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.
தினம்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா மார்ச் 23ம் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் மாலை 6:00 மணிக்கு எஸ் கரிசல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூ கரகம், தீச்சட்டிகள் ஆயிரங்கண் பானை மற்றும் அலகுகள் குத்தி ஊர்வலமாக வந்து கோயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் இறங்கி அம்மனை வழிபட உள்ளனர்.
டிரஸ்டிகள் ராக்கு லெட்சுமணன், பாண்டி உள்ளிட்டோர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.