/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.புதுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி தற்காலிக நிறுத்தம்
/
எஸ்.புதுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி தற்காலிக நிறுத்தம்
எஸ்.புதுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி தற்காலிக நிறுத்தம்
எஸ்.புதுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி தற்காலிக நிறுத்தம்
ADDED : அக் 04, 2025 03:48 AM
எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே கோணம்பட்டி புல்டாங்குட்டு மலைக்குன்றில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் சிவகங்கை மாவட்ட எல்லையான மாகோணம்பட்டி புல்டாங்குட்டு மலைக்குன்றில் ரூ.6.53 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது.
உயரமான இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் அடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கு கழிவுநீர் கசிந்து எஸ்.புதுார் ஒன்றிய கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி அதனை சுற்றி உள்ள 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் பொற்கொடி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து தற்காலிகமாக பணிகளை நிறுத்த உத்தரவிட்டதுடன், வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட துறையினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தர விட்டார்.