/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே கேட் மூடலா: மக்கள் முற்றுகை
/
ரயில்வே கேட் மூடலா: மக்கள் முற்றுகை
ADDED : அக் 04, 2025 03:48 AM
மானாமதுரை: மானாமதுரை பைபாஸ் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதாக வந்த தகவலை யடுத்து மக்கள் ரயில்வே கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு முன் பைபாஸ் ரோட்டில் ரயில்வே கேட் செயல்பட்டு வந்தது.
அங்கு மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு சில வருடங்களுக்கு முன்பு அந்த ரயில்வே கேட்டை மூடுவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தபோது அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கேட்டை மூடினால் சிரமம் ஏற்படும் எனக் கூறி போராட்டங்களை நடத்தினர்.
ரயில்வே நிர்வாகம் அந்த ரயில்வே கேட்டை மூடும் பணியை நிறுத்தியது.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று பைபாஸ் ரயில்வே கேட் அருகே வாகனங்கள் கேட்டை கடந்து செல்ல முடியாதவாறு தோண்டியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிரந்தரமாக ரயில்வே கேட் மூடப்படவுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து ஆனந்தவல்லி அம்மன் நகர், பெமினா நகர் பைபாஸ் ரோடு ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் ரயில்வே கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் ரயில்வே கேட் மராமத்து பணி மட்டுமே நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.