/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வின்றி ஏமாற்றம் கிடப்பில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி எனவும் சாடல்

ADDED : பிப் 08, 2025 01:22 AM
சிவகங்கை,:தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பணி நிரந்தரம், யு.ஜி.சி., விதிகளின்படி சம்பள உயர்வு வழங்காததால் 25 ஆண்டுக்கும் மேலாக ஏமாற்றமடைந்துள்ளதாக அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
தமிழகத்தில் 164 அரசு கல்லுாரிகள், 6 கல்வியியல் (பி.எட்.,) கல்லுாரிகள் செயல்படுகின்றன. இங்கு 1998 ல் மாதம் ரூ.6,000 சம்பளத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தற்போது வரை அரசு கல்லுாரிகளில் இவர்கள் 7,300 பேர் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 11 மாதங்களுக்கு மட்டுமே அரசு மாதம் ரூ.25,000 வீதம் சம்பளம் வழங்குகிறது.
அரசு கல்லுாரிகளில் மாநில அளவில் 8,000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், கவுரவ விரிவுரையாளர்களை தொடர்ந்து அரசு 25 ஆண்டுக்கும் மேலாக நிரந்தரம் செய்யாமல் வைத்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்களை, நிரந்தரம் செய்ய நேர்முக தேர்வு நடத்திய நிலையில் பிறகு அந்த நடவடிக்கையை கைவிட்டனர்.
2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்தால் அரசு கல்லுாரியில் பணிபுரியும் 7,300 கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சியில் அமர்ந்து மூன்றரை ஆண்டுகளான நிலையில் பணி நிரந்தரம் செய்யவில்லை.
ஏமாற்றத்தில் கவுரவ விரிவுரையாளர்கள்
பெயர் சொல்ல விரும்பாத கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது: எங்களை தி.மு.க., தேர்தல் அளித்த வாக்குறுதியின்படி நிரந்தரம் செய்து பணிபாதுகாப்பு வழங்க வேண்டும். மாத சம்பளமாக பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) நிர்ணயித்த ரூ.57,500ஐ வழங்க வேண்டும். இதை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் தொடர்ந்து பணிநிரந்தரம் செய்யாமலும், யு.ஜி.சி., சம்பளத்தை வழங்காமலும் உயர்கல்வி துறை நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. இதனால் 7,300 கவுரவ விரிவுரையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றனர்.