UPDATED : நவ 22, 2026 04:48 PM
ADDED : நவ 22, 2026 04:46 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிச.2 முதல் 31 வரை குரூப் 4 தேர்வுக்கு மாதிரி தேர்வு பயிற்சி நடைபெறவுள்ளது.
அரசுப் பணியாளர் குரூப் 4 தேர்வில் 46 பதவிகளுக்கு 6 ஆயிரத்து 574 காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்விற்காக இலவச 21 தேர்வுத் தொடர் (மாதிரி தேர்வுகள்) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிச.2 முதல் 31 வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு தொடரானது பாடத்திட்ட அட்டவணைப்படி குறிப்பிட்ட தேதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுத் தொடர் தொடர்பாக நேரிலோ அல்லது 04575 240435 என்ற தொலைபேசி எண்ணிலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்கொள்ளலாம்.
