UPDATED : அக் 13, 2026 03:51 PM
ADDED : அக் 13, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை அருகே அனுமந்தங்குடி மணிமுத்தாறில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வி.ஏ.ஓ., பிரசன்ன குமார் போலீசில் புகார் அளித்தார்.
தனிப்படை போலீசார் மணிமுத்தாறு பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது மணல் அள்ளிய தேரளப்பூர் சொர்ணலிங்கம் 38 மற்றும் அனுமந்தங்குடி மாணிக்கம் 49 இருவரை கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
