ADDED : ஜூன் 02, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகே பெரியவண்டாலை பகுதி நாட்டார் கால்வாயில்மணல் கடத்துவதாக வி.ஏ.ஓ., சித்திரை செல்வன் போலீசில் புகார் அளித்தார்.
வி.ஏ.ஓ., மற்றும் தலையாரி ராஜமாணிக்கம் ஆகியோர் ஆய்வு செய்தபோது, டிராக்டரில் மணல் திருடிய கும்பல் தப்பியது. இளையான்குடி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து பெரியவண்டாலை செந்தில்குமார் மீது வழக்கு பதிந்தனர்.