/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் மணல் திருட்டு
/
திருப்புவனத்தில் மணல் திருட்டு
ADDED : நவ 22, 2025 03:10 AM

திருப்புவனம்:திருப்புவனம் வைகை ஆற்றில் பாலம், கூட்டுகுடிநீர் திட்ட கிணறு அருகே மணல் அள்ளப்படுகிறது.
கட்டுமான தேவைக்காக வைகை ஆற்றில் தொடர்ச்சியாக தலைச்சுமையாக சிலர் மணல் திருடுகின்றனர். மணல் குவாரி இல்லாததால் திருட்டு மணலை நம்பியே கட்டட பணிகள் நடந்து வருகின்றன. இரவு பத்து மணி முதல் காலை நான்கு மணி வரை வைகை ஆற்றில் டூவீலரில் மணல் திருட்டு நடைபெறுகிறது.
வைகை வடகரை தண்ணீர் தொட்டி, கானுார் தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அள்ளப்படுகிறது. வைகை ஆற்றுப்பாலத்தின் அருகே மணல் திருட்டால் பள்ளங்கள் உருவாகி உள்ளன. மணல் திருட்டு குறித்து புகார் கொடுத்தாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தின் இருபுறமும் தொடர்ச்சியாக மணல் திருடப்படுவதால் பாலத்தின் தாங்கு திறனும் பாதிக்கப்பட்டுள்ளது.

