/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் அறுக்கப்படும் மாடுகளால் இளையான்குடியில் சுகாதாரக்கேடு
/
ரோட்டில் அறுக்கப்படும் மாடுகளால் இளையான்குடியில் சுகாதாரக்கேடு
ரோட்டில் அறுக்கப்படும் மாடுகளால் இளையான்குடியில் சுகாதாரக்கேடு
ரோட்டில் அறுக்கப்படும் மாடுகளால் இளையான்குடியில் சுகாதாரக்கேடு
ADDED : மார் 04, 2024 05:17 AM
இளையான்குடி: இளையான்குடியில் நகருக்கு மத்தியில் தெருக்களில் அதிகாலை நேரங்களில் கன்றுக்குட்டி, மாடுகளை அறுத்து விற்பனை செய்வதால் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 14 வது வார்டில் சில தெருக்களில் அதிகாலை நேரத்திலேயே கன்று குட்டிகள், மாடுகளை ரோட்டில் வைத்து அறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாட்டு இறைச்சிகளை விற்பனை செய்பவர்கள் மாட்டு கழிவுகளை அப்பகுதியிலேயே விட்டு செல்வதினால் தெருக்களில் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
இப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறுகையில், இப்பகுதியில் வாரத்தில் 3 நாட்கள் அதிகாலையில் கன்று குட்டிகள் மாடுகளை ரோட்டில் வைத்து அறுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் மாட்டிறைச்சியின் கழிவுகளை சுத்தம் செய்யாமல் அப்பகுதியிலேயே விட்டு செல்வதால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.