UPDATED : அக் 08, 2026 04:39 PM
ADDED : அக் 08, 2026 04:36 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: நகராட்சி துாய்மை பணியாளர்களை அச்சுறுத்திய நபர்களை கைது செய்யக்கோரி சிவகங்கையில் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை அரண்மனைவாசல் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில துணை தலைவர் வீரையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகானந்தம், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உமாநாத், செயலாளர் சேதுராமன், பொருளாளர் அய்யம்பாண்டி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். தனியார் மய அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய், குறைந்த பட்ச சம்பளம் வழங்கு உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்ட, துாய்மை பணியாளர்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொண்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ////
